30 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி உடுமலை ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி செய்து தரக் கோரிக்கை

உடுமலை,டிச.30: உடுமலை ரயில் நிலையம் வழியாக சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கோவையில் இருந்து உடுமலை வழியாக பழனிக்கு ரயில் இயக்கப்படுகிறது. தினசரி ஏராளமான பயணிகள் உடுமலை ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு குடிநீருக்காக குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் வருவதில்லை. இதனால் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். மேலும், குடிநீர் தொட்டியில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக குடிநீர் வசதி செய்ய வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: