ஜெகந்நாத பெருமாள் கோயிலில் வளர்பிறை அஷ்டமி சூக்த ஹோமம்

கும்பகோணம், ஜன.22: கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகந்நாத பெருமாள் கோயிலில் சுக்லபட்ச வளர்பிறை அஷ்டமியையொட்டி சூக்த ஹோமம் நடந்தது. இதில் உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று முற்றிலும் அழிய வேண்டியும், டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மற்றும் வியாபாரம் செழிக்க வேண்டுமென பிரார்த்தனை நடந்தது. இதையடுத்து காலை 11 முதல் மதியம் 1.30 மணி வரை பஞ்சசூக்த ஹோமம், சுதர்சன ஹோமம், மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு, மூலவர், உற்சவர் சுவாமிக்கு சர்வத்தர திருமஞ்சனம், சகஸ்ரநாம அர்ச்சனை தீபாராதனை நடந்தது. செண்பகவல்லி தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் வெளிப்பிரகார புறப்பாடு நடந்தது. இதில் சேலம் முன்னாள் அமைச்சர் விஜயலெட்சுமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. வானமாமலை ஜீயர் சுவாமிகள் மடம் நிர்வாகத்தினர், ஜெகந்நாத பெருமாள் கைங்கர்ய சபாவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: