சென்னை: சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு, பொதுக்குழு நடந்த விதம் கேலிக்கூத்தானது என வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு எப்படி நடக்கும் என்ற விதிமுறையே சேலம் பொதுக்குழுவில் மீறப்பட்டுள்ளது. ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு, செயற்குழு முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது. ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவின் ஒரு சி.டி.யே போதும், பாமகவை அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது. பாமக தங்களுக்கு சொந்தமில்லை என ராமதாஸ் தரப்பு எங்களுக்கு சான்றுகளை தந்து கொண்டே இருக்கிறது. அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது என்று கூறினார்.
