தேசிய கபடி போட்டியில் சாத்தங்குடி மாணவர்கள் சாதனை

சாயல்குடி, ஜன.22:   நேபாளம் பொகராவில் கிராமபுற விளையாட்டு மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக தேசிய அளவிலான கபடி போட்டி நடந்தது. 20 வயதிற்குட்பட்ட கபடி போட்டியில் இந்தியா அணி கலந்து கொண்டது. இந்திய அணியில் கடலாடி ஊராட்சி ஒன்றியம், சாத்தங்குடி கிராமத்தை ரஞ்சித் முருகன்(20), தங்கநாதன்(19) ஆகியோர் இடம் பெற்று விளையாடினர். இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் கலந்து கொண்டு மோதின. இதில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

இதில் ரஞ்சித்முருகன், தங்க நாதன் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். கபடி போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இவர்களை சொந்த ஊரான சாத்தங்குடியில் மாணவர்கள், இளைஞர்கள் கிராமமக்கள் பாராட்டி வரவேற்றனர். இதுகுறித்து வீரர்கள் கூறும்போது, ‘‘சாத்தங்குடி கிராமத்தில் பல தலைமுறையாக கபடி போட்டி பாரம்பரியமாக நடந்து வருகிறது. இதனால் கிராமத்தில் கபடி விளையாடும் இளைஞர்கள், மாணவர்களுக்கு சிறு வயது முதலே பயிற்சி அளித்து வருகின்றனர். இதனால் கபடி மீது ஆர்வம் ஏற்பட்டது.

பிறகு கிராம இளைஞர்கள் தந்த ஊக்கத்தால் தேசிய அளவிலான போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெற்றுள்ளோம். சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து விளையாடி இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்போம். நாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே முதுநிலை பட்டப்படிப்பிற்கு தேவையான உதவிகள், தேசிய அளவிலான, சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு சென்று வர தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும். என்றனர்.

Related Stories:

>