முத்துப்பேட்டை, டிச. 27: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அணைத்து அமைப்புகள் சார்பில் நேற்று சுனாமி 21ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு தமிழ் இலக்கிய மன்ற கௌரவ தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.
தமுஎச தலைவர் கோவி.ரெங்கசாமி, மதிமுக மாநில பொறுப்பாளர் நடராஜன், மூத்த குடிமக்கள் இயக்க தலைவர் தங்க.வீரையன், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆறுமுகம், வர்த்தகக் சங்க தலைவர் அருணாச்சலம், பொதுச் செயலாளர் அப்துல் அஜீஸ், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் ஜெயபால், வெற்றி தமிழர் பேரவை தலைவர் சுப.சிதம்பரம், ரயில் பயனிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மௌன அஞ்சலி செலுத்தினர்.
