ஒரத்தநாடு, டிச.27: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகளில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு யூனியன் அலுவலகம் எதிரே தஞ்சாவூர் முன்னாள் எம்.பி எஸ்.எஸ் பழனி மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், திருவோணம் யூனியன் அலுவலகம் முன்பு தொகுதி பொறுப்பாளர் பரணி கார்த்திகேயன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி முன்னிலையிலும், மேல உள்ளூர் கிராமத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையிலும் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
