சாலை விபத்தினை தடுக்க பேரி கார்டுகளில் ஒளிரும் பட்டை எல்இடி லைட்

அரியலூர்,டிச.27: சாலை விபத்தினை தடுக்க பேரி கார்டுகளில் ஒளிரும் பட்டை எல்இடி லைட் பொருத்தும் பணிகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூரில் இருந்து செல்லும் சில வாகனங்கள் வாரணவாசி மருதையாற்று புதிய பாலத்தில் எதிர் திசையில் செல்கின்றன.

எனவே விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, நேற்று அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் உதவி ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் இணைந்து, பேரிகார்டுகள், ஒளிரும் பட்டை, மற்றும் சோலார் எல்ஈடி லைட் ஆகியவற்றினை வைத்து, விபத்தினை தடுக்கும் பொருட்டு ஒரு வழி பாதையில் செல்லுமாறு அடையாளப்படுத்தியுள்ளனர். மேலும் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மருதையாற்று பாலத்தில் ஒரு வழி பாதையாக செல்லுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related Stories: