நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இன்றிரவு மற்றும் நாளை அதிகாலையில் உறைபனிக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இன்றிரவு மற்றும் நாளை அதிகாலையில் உறைபனிக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ‘தமிழ்நாட்டில் டிச.29 வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும். சென்னையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தென் கடலோர தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிச.29, 30ல் லேசான மழைக்கும், 31ம் தேதி தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும், சென்னை நகரில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழைக்கும் வாய்ப்பு’ எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: