கால்நடை முகாம் நடத்த கோரிக்கை

தொண்டி, ஜன.21:  தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியில் கோழி, ஆடு மாடுகள் பல்வேறு நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில கால்நடை மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால் பெரும்பாலானோர் வீடுகளில் கால்நடைகள் உள்ளது. மேலும் தற்போது நம்புதாளை உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இலவசமாக கோழி, ஆடுகள் வழங்கப்பட்டது. கடந்த சில தினங்களாக கன மழை பெய்தது.

இதையடுத்து இப்பகுதியில் கோழி மற்றும் ஆடுகள் அதிகளவில் இறந்து வருகிறது. மேலும் நோய் பரவாமல் தடுக்கவும் இறப்பை கட்டுப்படுத்தவும் கால்நடை மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கால்நடை வளர்ப்போர் கூறியது, ‘‘மழை அதிகமாக பெய்ததால் கால்நடைகளுக்கு நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. இலவசமாக வழங்கிய ஆடுகள் அதிகம் இறந்து விட்டது. அதனால் நோய் பரவாமல் தடுக்க தொண்டி மற்றும் நம்புதாளை பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: