10, 12ம் வகுப்புக்காக விருதுநகர் மாவட்டத்தில் 388 பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்

விருதுநகர், ஜன. 20:விருதுநகர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 28,710 மாணவ, மாணவியருக்கும், 12ம் வகுப்பு படிக்கும் 23,153 மாணவ, மாணவியர் என 51,863 மாணவ, மாணவியருக்காக விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருவில்லிபுத்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 189 அரசு, 89 அரசு உதவி பெறும், 75 மெட்ரிக், 35 சிபிஎஸ்இ- ஐசிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 388 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பெற்றோர் அனுமதி கடிதம் பெற்று வந்த மாணவ, மாணவியர் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதித்து, மாஸ்க், கிருமிநாசினி வழங்கி வகுப்பறைகளுக்குள் அனுமதித்தனர். ஒரு வகுப்பறையில் 25 மாணவ, மாணவியர் வீதம் அமர வைக்கப்பட்டனர். முதல் இரு தினங்களுக்கு மாணவர்களுக்கு மனரீதியான கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட  சில பள்ளிகளை கலெக்டர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். உடன் முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Related Stories:

>