மதுராந்தகம் அருகே சோகம் வாகன விபத்தில் தம்பதி பலி

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பைக், மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அதில் சென்ற தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவரது மனைவி ஆதிலட்சுமி (43). படாளம் அருகே உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு பைக்கில் நேற்று காலை சென்றனர். மதியம் வீட்டுக்கு புறப்பட்டனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மாமண்டூர் பகுதியில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், தூக்கி விசப்பட்ட தம்பதி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். தகவலறிந்து படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்கள் உதவியுடன் சடலங்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால், அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், இந்த விபத்து காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்கின்றனர்.   

Related Stories:

>