சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 6 ஆண்டு சிறை: மகிளா நீதமன்றம் உத்தரவு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம், பழைய கும்மிடிப்பூண்டியில்  வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர், கடந்த 20.1.2016 அன்று பாலியல் வன்கொடுமை செய்தார்.சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் மற்றும் பெற்றோர் அங்கு சென்றனர். அவர்களுக்கு, சிவகுமார் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும், நீதிபதி பரணிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, அத்துமீறியது, கொலை மிரட்டல் விடுத்தது சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மூலம் நிரூபனமானது. இதையடுத்து, வெவ்வெறு பிரிவுகளின் கீழ் சிவகுமாருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.6,500 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் கூடுதல் தண்டனையும் விதித்து நீதிபதி பரணிதரன் தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் சித்ரா ஆஜராகி வாதாடினார்.

Related Stories:

>