மார்த்தாண்டம், டிச. 17: மார்த்தாண்டம் அருகே முளமூட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் பிரதீஸ்(31) வங்கி ஊழியர். இவர் சம்பவத்தன்று தனது பைக்கில் குழித்துறையில் இருந்து புதுக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு பின்னால் ஊட்டுக்குழியை சேர்ந்த ஐடி ஊழியரான கிருஷ்ணகுமார் வேகமாக ஓட்டி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய பிரதீஸ் தூக்கி வீசப்பட்டார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் பிரதீசை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து பிரதீஸ் மார்த்தாண்டம் போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் ஐடி ஊழியரான விக்னேஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
