லக்னோ: உபி மாநில பாஜ தலைவர் பதவிக்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். தலைவர் பதவிக்கு பங்கஜ் சவுத்ரி மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்துள்ளதால் அவர் ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.
மகாராஜ்கஞ்ச் தொகுதியில் இருந்து 7 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கஜ் சவுத்ரி பிற்படுத்தப்பட்ட குர்மி சமூகத்தை சேர்ந்தவர்.உபியில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் குர்மி மக்கள் கடந்த பொது தேர்தலில் பெருவாரியாக சமாஜ்வாடிக்கு வாக்களித்தனர். இது அந்த கட்சிக்கு 37 தொகுதிகளில் வெற்றியை கொடுத்தது.
