கரூர் தெற்கு காந்தி கிராமம் சாலை பள்ளத்தில் தேங்கி கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், ஜன. 19: கரூர் நகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்திகிராமம் ஐயப்பன் கோயில் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சுற்றிலும் உள்ள பல்வேறு தெருக்களுக்கு இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், தொடர்மழையின் காரணமாக ஐயப்பன் கோயில் அருகே பள்ளம் ஏற்பட்டு, பள்ளத்தில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இதனை கடந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்களின் நலன் கருதி இந்த பள்ளத்தை சரி செய்ய தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>