ரயில் நிலையத்தில் நீண்ட வரிசை சங்கிலியாண்டபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததால் பொதுமக்கள் மறியல்

திருச்சி, ஜன.17:  திருச்சி சங்கிலியாண்டபுரம் சுப்பையா தெரு அடுத்த அஸ்வின்நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் இப்பகுதி சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கடந்த 4 நாட்களாக மழைநீர் வடியாமல் உள்ளது. இதைதொடர்ந்து தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி அரியமங்கலம் கோட்ட இளநிலை பொறியாளர் சீனிவாசனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் அஸ்வின்நகரில் நடந்து சென்ற மூதாட்டி மழைநீரில் வழுக்கி விழுந்தார். இதையடுத்து மழைநீரை அகற்றாததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதி செயலாளர் ரெட்டமலை தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சுரேஷ், பாலக்கரை பகுதி செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து கரிமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலக்கரை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், இளநிலை பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி நாளை சரி செய்வதாக உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: