திருநாகேஸ்வரத்தில் தகராறு மளிகை கடை கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது: 2 பேருக்கு வலை

தஞ்சை, ஜன.17: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் கடை வீதி தேரடி அருகில்ஒரு மளிகை ஸ்டோர் உள்ளது. இக்கடையை ரஜினுதீன் என்பவர் நடத்திவருகிறார். கடந்த 13ம் தேதி அன்று இரவு சுமார் 9.30 மணி அளவில் கடைக்கு சார்லஸ் என்பவர் அவரது மனைவியுடன் மளிகை சாமான்கள் வாங்க வந்துள்ளார். கடையில் உள்ள நபரிடம் வெல்லம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அக்கடையில் வேலை பார்த்த நபர் உருண்டை வெல்லம் தான் உள்ளது என செய்கை மூலம் கையை காட்டியுள்ளார். ஏன் செய்கையில் காண்பிக்கிறார் என கோபப்பட்டு சார்லஸ் கேட்டுள்ளார். பிறகு அங்கிருந்து சென்ற சார்லஸ் அவரது நண்பர்களிடம் விவரத்தை கூறியுள்ளார். குடிபோதையில் இருந்த அவரது நண்பர்கள் பட்டாக்கத்தி யுடன் வந்து கடையில் உள்ளவர்களிடம் தகராறு செய்து அங்குள்ள கண்ணாடியை உடைத்து சேதப் படுத்தினர். கடையில் வேலை பார்த்த முகமது பைசல் இதுகுறித்து திருநாகேஸ்வரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சார்லஸ் நண்பர்கள் சந்தானம், ஆகாஷ் இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சார்லஸ், விக்னேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>