ஊழல் வழக்கில் பொலிவியா மாஜி அதிபர் திடீர் கைது

லா பாஸ்: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், 20 ஆண்டுகளாக மூவ்மென்ட் டுவெர்ட் சோஷலிசம் கட்சி ஆட்சியில் இருந்தது. அந்த கட்சியை சேர்ந்த லூயிஸ் ஆர்ஸே அதிபராக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தலைவர் ரோட்ரிகோ பாஸ் வெற்றி பெற்றார். ரோட்ரிகோ கடந்த மாதம் 8ம் தேதி ஆட்சி பொறுப்பேற்றார். இவர் ஆட்சி பொறுப்பேற்றதும் முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல் விசாரணையை தொடர்ந்து முன்னாள் அதிபர் லூயிஸ் ஆர்ஸே திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: