தெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. தாக்குதலில் நெதன்யாகுவின் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை என ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் விமானப் படை தளபதி அலுவலகமும் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரான் ராணுவம் கூறியது.
