கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது

வடலூர், டிச. 12: குள்ளஞ்சாவடி அருகே கிருஷ்ணன்பாளையம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக குள்ளஞ்சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி தலைமையில் எஸ்ஐ கனகராஜ், தனி பிரிவு காவலர் அருண்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சிய 3 நபர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அதில் ஒரு நபரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், மேல் பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் சரவணன்(39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஐந்து லிட்டர் சாராயம், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இரண்டு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து நான்கு பிளாஸ்டிக் டிரம்களில் வைத்திருந்த 130 லிட்டர் ஊறலை கொட்டி அழித்தனர். தகவல் அறிந்த எஸ்பி ஜெயக்குமார் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய பெண் உள்பட 2 பேரை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். இதில் கைது செய்யப்பட்ட சரவணன் மீது குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: