ஓடையில் மணல் திருட்டு 2 டிராக்டர் டிப்பர்கள் பறிமுதல்

மங்கலம்பேட்டை, பிப். 27: மங்கலம்பேட்டை அடுத்துள்ள குருவன்குப்பம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் டிராக்டர் மூலம் சிலர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக ஆலடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அங்குள்ள ஓடையில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த சிலர், போலீசாரைக் கண்டதும்; பதிவு எண் எதுவும் இல்லாத 2 டிராக்டர் டிப்பர்களில் ஏற்றிய திருட்டு மணலுடன் அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர். இதையடுத்து, மணலுடன் 2 டிராக்டர் டிப்பர்களையும் கைப்பற்றிய ஆலடி போலீசார், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: