மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்

பண்ருட்டி, பிப். 27: பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. திருமணமாகாமல் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ராஜா(55) என்பவர், இவரது வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பெண்ணின் தந்தை பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியா சோபி மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: