சின்னசேலம், பிப். 28: சின்னசேலம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பரசு மகள் அன்புபாரதி (27). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார். மேலும் இவருடைய தந்தை அன்பரசு சின்னசேலம் அருகே பூண்டி எல்லையில் சாலையோரம் வள்ளலார் மடத்தை நிறுவி தொண்டு செய்து வருகிறார். அவருக்கு துணையாக அவரது மனைவி கல்யாணியும் அங்கேயே தங்கி திருப்பணி செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5.45 மணியளவில் அன்புபாரதி வள்ளலார் மடத்தில் தங்கி உள்ள தனது தாயார் கல்யாணியை அழைத்துவர தனது எலக்ட்டிரிக் ஸ்கூட்டியில் சின்னசேலத்தில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் இவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின், அரை பவுன் டாலர் ஆகியவற்றை கழுத்தில் இருந்து பறித்து சென்று விட்டார். இதுகுறித்து அன்புபாரதி சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
தனியார் பள்ளி பெண் ஊழியரை வழிமறித்து செயின் பறிப்பு
- செயின்
- சின்னசலம்
- பக்.
- அன்புராசு
- அன்புபரதி
- சின்னேசலம் சிவன் கோயில் தெரு
- கள்ளக்குறிச்சி
- அன்பரசு
- பூந்தி
- சின்னேசலம்
