கேரளாவில் திருச்சூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு!!

திருவனந்தபுரம்: கேரளாவில் திருச்சூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சொந்த கிராமத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் குடும்பத்துடன் சென்று வாக்களித்திருக்கிறார். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 2-ம் கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 9 தேதி எர்ணாகுளத்திலிருந்து திருவனந்திபுரம் வரை முதல் கட்டமாக 7மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று திருச்சூர் முதல் காசர்கோடு வரை இருக்கக்கூடிய 7 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 10%சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த தேர்தல் பொறுத்தவரைக்கும் 47 நகராட்சிகள் 3 மாநகராட்சி 470 ஊராட்சிகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கக்கூடிய வாக்குப்பதிவு தான் நடைபெற்று வருகிறது.

கடந்த 2 வாரங்களாக தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில் மக்கள் இடத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபத்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து இன்றிக்கு தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. காலையில் இருந்து வாக்காளர்கள் தங்களது உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் விதமாக வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். தேவையான அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: