பாலமேட்டில் இன்ஸ்பெக்டர் வாகனம் கண்ணாடி உடைப்பு

மதுரை, ஜன. 17:  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி. இவர் நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தில் நடந்த பாலமேடு ஜல்லிகட்டு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தார். பாலமேட்டில் தனது ஜீப்பை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது ஒருவர் ஜீப் மீது கல்லை வீசிவிட்டு ஓடினார். இதில் ஜீப்பின் கண்ணாடி உடைந்தது. உடனே அங்கிருந்தவர்கள், அவரை விரட்டி பிடித்து பாலமேடு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், இவர் பாலமேடு கிழக்குத் தெருவை சேர்ந்த சங்கர் மகன் கருப்பசாமி (எ) அருணாசலம் (23) என்பதும், குடிபோதையில் கல்லை வீசியதும் தெரிந்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி புகாரில் போலீசார் அருணாசலத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>