பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பசுவந்தனையில் மாவட்ட கைப்பந்து போட்டி

ஓட்டப்பிடாரம், ஜன.17: பசுவந்தனையில் பொங்கலை முன்னிட்டு நடந்த கைப்பந்து போட்டியில் முதல் பரிசு பெற்ற பாஞ்சை சிலோன் காலனி சிம்சோன் அணி வீரர்கள் பாராட்டப்பட்டனர். தமிழர் திருநாளை முன்னிட்டு பசுவந்தனை ராயல் கிளப் சார்பில் 17ம் ஆண்டு கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகளின் வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள பஞ்சை சிலோன் காலனி சிம்சோன் அணி வீரர்கள் முதலிடம் பெற்று ரூ.15 ஆயிரத்து 17 மற்றும் நினைவுக் கோப்பையையும் தட்டிச் சென்றனர்.இரண்டாம் பரிசு ரூ.11 ஆயிரத்து 17 ஐ பசுவந்தனையை அடுத்த சீகம்பட்டி என்ற குமரெட்டியாபுரம் கிராம அணியினரும், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரத்து 17ஐ பொம்மையாபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகராஜா அணியினரும் பெற்றறனர்.  இப்போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற பாஞ்சை சிலோன் காலனியைச் சேர்ந்த சிம்சோன் அணி வீரர்களுக்கு நேற்று அக்கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பாஞ்சாலங்குறிச்சி பஞ்.தலைவர் கமலாதேவி யோகராஜ் தலைமை வகித்தார். சிம்சோன் அணியின் முன்னாள் தலைவர் யோகராஜ் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களை மாவட்ட கவுன்சிலர் தேவராஜ், ஓட்டப்பிடாரம் கூட்டுறவு சங்கத் தலைவரும் தொழிலதிபருமான பெரியமோகன் என்ற மாடசாமி உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்தினர். அணி வீரர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கவுவிக்கப்பட்டனர்.

Related Stories:

>