புதுவையில் புதிதாக 16 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 2 பேர் பலி

புதுச்சேரி, ஜன. 17: புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 2,146 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 8, மாகே- 8 என மொத்தம் 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால், ஏனாமில் பாதிப்பு இல்லை. புதுச்சேரி நல்லவாடு புதுக்குப்பத்தை சேர்ந்த 60 வயது முதியவரும், மாகே சலக்காராவை சேர்ந்த 69 வயது மூதாட்டியும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 22 பேர் குணமாகி சென்றுள்ளனர். தற்போது 286 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதில் 114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 172 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 38,611 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,683 பேர் குணமாகி சென்றுள்ளனர். இதுவரை 642 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 524 பேரும், காரைக்காலில் 64 பேரும், ஏனாமில் 45 பேரும், மாகேவில் 9 பேரும் இறந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும், குணமானவர்களின் விகிதம் 97.60 சதவீதமாகவும் உள்ளது, என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>