டெல்லி : தேச பக்தி குறித்து எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். மேலும் அவர்,”முன்னாள் பிரதமர் நேருவை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள். 1921ல் ஒத்துழையாமை இயக்கத்தின்போது வந்தே மாதரம் என முழக்கமிட்டு லட்சக்கணக்கானோர் சிறை சென்றனர். லட்சக்கணக்கானோர் சிறை சென்றபோது சங்பரிவார் அமைப்பினர் ஆங்கிலேயருக்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
