சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3300 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 21.2 அடியை எட்டி நிரம்பி உள்ளது. புழல் ஏரிக்கு நேற்று 470 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 640 கனஅடியாக அதிகரித்துள்ளது.
