சென்னை: கடந்த 27 ஆம் தேதி வெளியிடப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மென்பொருள் பிழையால் முடிவுகளில் தவறு ஏற்பட்டுள்ளதால் நிறுத்தி வைப்பு; உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
