விருதுநகரில் மக்கள் குறைதீர் கூட்டம்

 

விருதுநகர், டிச.9: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சுகபுத்ரா, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும்பட்டா மாறுதல், வேலை வாய்ப்பு, ரேசன் கார்டு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.

Related Stories: