வடக்குகாரசேரியில் ரூ.4.30 கோடியில் இருவழிச்சாலை விரிவாக்கப் பணிகள்

செய்துங்கநல்லூர், டிச. 9: வடக்குகாரசேரியில் ரூ.4.30 கோடியில் ஒருவழிச்சாலையை இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெய்வச்செயல்புரத்தில் இருந்து புளியம்பட்டி வழியாக கடம்பூர் வரை செல்லும் ஒரு வழிச்சாலை இருவழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடக்குகாரசேரி கிராமத்தில் இருந்து 2.300 கிமீ தூரத்திற்கு ஒரு வழிச்சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் பணிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை உள்கட்டமைப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சி, வடக்குகாரசேரி கிராமத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு கொடியசைத்து சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்தப் பணிகள் 3 மாத காலத்திற்குள் நிறைவுபெறும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர் ரஞ்சித் குமார், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் இசக்கி ராஜா, விஏஓ சொர்ணலட்சுமி, ஒப்பந்ததாரர் முத்தையா அண்ட் கோ நிறுவனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: