பாதாள சாக்கடை பணிகளை முடிக்க கோரி காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் கடைகள் அடைப்பு

காரைக்குடி, ஜன.13: காரைக்குடியில் பாதாளச்சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள், வணிகர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை பணிகள் முடியாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை அப்படியே போட்டுள்ளனர். மக்கள் பள்ளங்களில் விழுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக பாதாள சாக்கடை பணியால் சாலைகள் சேறும் சகதியாக காட்சியளிக்கின்றன. இதனை மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே பாதாளசாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, செஞ்சை, கீழஊரணி, ரஸ்தா, புளியமரத்தடி, பாப்பா ஊரணி, கணேசபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் வணிகர்கள் நேற்று பழைய பஸ்ஸ்டாண்டு முன்பு கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories:

>