திருவெறும்பூர், நவ.27: திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்றவரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே பழங்கனாங்குடியில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மளிகை கடையை சோதனை செய்த போலீசார், 5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளரான மாதா கோவில் தெருவை சேர்ந்த தேவதாஸ் மகன் சுரேஷ்குமார் (39) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
