துவரங்குறிச்சி 14வது வார்டில் சாலை சீரமைக்க கோரிக்கை

துவரங்குறிச்சி, நவ.29: துவரங்குறிச்சி பகுதியில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு அண்ணா நகர் பகுதியில் தற்போது 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் முறையான சாலைகள் இல்லாததால் மண் சாலையிலேயே இப்பகுதி மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.

மழை நேரங்களில் இந்த சாலை மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகின்றனர். இதனால் மழை காலத்தில் சாலையில் நடந்து செல்ல முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் தடுமாறி வருகின்றனர். மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மழை காலத்தில் சாலையில் நடந்து செல்லும் போது வழுக்கி விழுந்து மருத்துவச் செலவுகளும் ஏற்படுகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: