வெம்பக்கோட்டை, டிச. 6: சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதிகளில் டிட்வா புயல் மழைக்கு பின் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.
இந்நிலையில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த வந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழந்து சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை ஒரு மணிநேரத்துக்கு மேலாக மழை பெய்தது. வெம்பக்கோட்டை பகுதியில் பெய்த மழையால் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் திடீர் மழை காரணமாக பட்டாசு உற்பத்தியானது பாதிப்படைந்தது.
