பழவேற்காட்டில் வழி தவறி வந்த புள்ளிமான் வனத்துறையிடம் ஒப்படைப்பு

பொன்னேரி, டிச.6: பழவேற்காட்டில் வழித்தவறி வந்த புள்ளிமான் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, பழவேற்காட்டில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி தளம் அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்று, ஆந்திர-தமிழ்நாடு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஜமிலாபாத் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்றது. இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் முன்னாள் கவுன்சிலர் ஜமாலுக்கு தெரியப்படுத்த அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், நரசிம்மன் தலைமையிலான வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். அப்போது, கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குனர் ஹாஜா மொய்தின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: