கரூர் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

கரூர், ஜன. 13: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதியன்றும், குடியரசு தின நாளான ஜனவரி 26ம்தேதி மற்றும் ஜனவரி 28ம்தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு ஆகிய மூன்று நாட்கள் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் ஹோட்டல்களுடன் இணைந்த மதுபான கூடங்களில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது.விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விதிகள் 2003ன்படியும், தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1980ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சார்வரி வருடம் மார்கழி மாதம் 29 -ம் நாள். புதன்கிழமை. அமாவாசை.

திதி : அமாவாசை காலை 10.30 மணி வரை; அதன் பிறகு பிரதமை.

நட்சத்திரம் : உத்திராடம் விடியற்காலை  5.28 மணி வரை ; அதன் பிறகு திருவோணம்.

யோகம் : அமிர்த யோகம். சூலம் : வடக்கு; பரிகாரம் : பால்.

நல்ல நேரம் : காலை 9.30 - 10.30; மாலை 5.00 - 6.00.

ராகு காலம் : மதியம் 12.00 - 1.30 மணி வரை.

எமகண்டம் : காலை 7.30 - 9.00 மணி வரை.

சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்.

Related Stories:

>