விருதுநகர், டிச.5: கூமாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தகவல்: வத்திராயிருப்பு வட்டம் கூமாபட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பொது மருத்துவம், எலும்பு, மகப்பேறு, குழந்தை, இருதயம், நரம்பியல், தோல், கண், பல், காது, மூக்கு, தொண்டை, மனநலம், முடநீக்கியல், நெஞ்சக நோய், நீரழிவு நோய் சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது. முகாமில் ரத்த வகை, ஹிமோகுளோபின், சர்க்கரை அளவு, ரத்த அணுக்கள், சிறுநீரகம், கல்லீரல், கொழுப்பு சத்து பரிசோதனைகள் என அனைத்தும் இலவசமாக பரிசோதிக்கப்படும். வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
