ஓட்டப்பிடாரத்தில் சமத்துவ பொங்கல் விழா

ஓட்டபிடாரம், ஜன. 13: ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு பஞ்சாயத்து தலைவரும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான இளையராஜா தலைமை வகித்தார். விழாவில் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஹரிஹரன், ஊராட்சி செயலாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்ததனர். பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக சமத்துவ பொங்கல் இட்டு இறைவன், இயற்கை, வேளாண் பெருமக்கள்  மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தப்பபட்டு அனைவருக்கும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>