வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

வள்ளியூர், ஜன. 13:  வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா தலைமை வகித்தார். எலும்பு முறிவு மருத்துவர் கார்ததிகேயன், டாக்டர் சுப்பிரமணியன், சரசு, அரசு சித்தமருத்துவர் ஆயிஷா பேகம் முன்னிலை வகித்தனர். இதையொட்டி மூலிகை குணம் நிறைந்த துளசி, கற்றாழை, வெற்றிலை, ஆவாரை, பிரண்டை, நொச்சி, நிலவேம்பு, ஆடாதொடை, தூதுவளை, கறிவேப்பலை, அஸ்வகந்தா, ஊமத்தை, வெள்ளெருக்கு இலை மற்றும் கரிசலாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு மூலிகை மரக்கன்றுகள்  மருத்துவமனை வளாகத்தில் நடப்பட்டன. ஏற்பாடுகளை அரசு மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>