புகையிலை விற்ற 3 பேர் கைது

கெங்கவல்லி, ஜன.12:  கெங்கவல்லி மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ காமராஜ் தலைமையிலான போலீசார் கெங்கவல்லி மற்றும் கடம்பூரில் சோதனை செய்தபோது கடம்பூர் பகுதியைச் சேர்ந்த பெரோஸ்கான்(58), தங்கவேல் (52), பன்னீர்செல்வம் (60) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>