வீரராகவ பெருமாள் கோயிலில் கருட சேவை விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தை பிரமோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை கருட சேவை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர்  வீரராகவ பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா இரு தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூன்றாம் நாளான நேற்று காலை 5 மணிக்கு உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால்  அலங்கரிக்கப்பட்டு கோபுர தரிசனமும், தொடர்ந்து கருட வாகனத்தில் உற்சவர் கோயில் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நான்காம் நாளான இன்று தை அமாவாசையையொட்டி காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஏழாம் நாளான 15ம் தேதி காலை தேரில் காட்சி தருகிறார்.  திருவிழாவும் 17ம் தேதி காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.  விழா ஏற்பாடுகளை, வீரராகவ சுவாமி கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான ஊழியர்கள் செய்துள்ளனர். 

Related Stories:

>