கலெக்டரிடம் மக்கள் மனு ரங்கம் உபய மண்டபத்தில் முதியவர் மர்மசாவு

திருச்சி, ஜன. 12: ரங்கம் உபய மண்டபத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரங்கம் திருவடி தெரு ரெங்கநாதர் வழிநடை உபய மண்டபத்தில் நேற்று முன்தினம் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரங்கம் எஸ்ஐ மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

Related Stories:

>