தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கில் சர்வதேச அளவில் நீச்சல் போட்டி

தஞ்சை, ஜன.12: தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளும் 12 வயதிற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் உத்தரவின்படி இவ்வீரர்கள் சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொள்ளவும், நிலையான இயக்க நடைமுறைகளுக்குட்பட்டும் விளையாட்டரங்கில் பயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி மேற்கொள்ள வரும் வீரர்கள், வீராங்கனைகள் உடலின் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பயிற்சிக்கு முன்பும், பின்பும், கிருமி நாசினி திரவம் மூலம் கைகளை நன்றாக கழுவ வேண்டும். பயிற்சி மேற்கொள்ள வரும் வீரர், வீராங்கனைகள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரிடமிருந்து வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள அரசின் நிலையான இயக்க நடைமுறைகளுக்குட்பட்டு பயிற்சி மேற்கொள்ள என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>