×

புதுக்கோட்டை சிபிஎம் மாவட்டக்குழு சார்பில் அரசியல் விளக்க கருத்தரங்கம்

 

புதுக்கோட்டை, டிச.3: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் அரசியல் விளக்கக் கருத்தரங்கம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது.
‘நவபாசிசம் ஒழியட்டும். நம் தேசம் சிவக்கட்டும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கருத்தரங்கில், கலந்து கொண்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் .பேபி, மாநில செயலாளர்.சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை எம்எல்ஏ ஆகியோரும் உரையாற்றினர்.கருத்தரங்கில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கவிவர்மன், மதியழகன், சலோமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்

Tags : explanation ,Pudukkottai CPM District Committee ,Pudukkottai ,Pudukkottai District Committee of the Communist Party of India ,Marxist ,District Secretary ,S. Shankar.… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...