இலவச ஆடுகள் வழங்கல்

சின்னாளபட்டி, ஜன. 12: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா தாதன்கோட்டையில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி தலைமை வகிக்க, துணை தலைவர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். ஒன்றியகுழு உறுப்பினர் அமுதா வள்ளி வரவேற்றார். 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.18 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, கண்ணன், பஞ்சவர்ணம், செல்வி, ஊராட்சி மன்ற செயலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>