குடும்ப பிரச்னையில் எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 

வானூர், டிச. 1: வானுார் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இரும்பை ரோடு முதல் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி மஞ்சுளா, (43) திருமணமாகி 21 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு, ராஜேஸ்வரி (21), வேல்விழி (18) இரு மகள்களும், அப்பு (15) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரமேஷிக்கும், மஞ்சுளாவிற்கும் அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஒரே வீட்டில் ரமேஷ் தனது மூத்த மகள் ராஜேஸ்வரி, மகன் அப்புவுடனும், மஞ்சுளா தனது இளைய மகள் வேல்விழியுடனும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு, ரமேஷ் மொபைல் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.

இதை பார்த்த மஞ்சுளா தனது கணவரை கண்டித்துள்ளார். அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ரமேஷ் மஞ்சுளாவை தாக்கி விட்டு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த மஞ்சுளா, குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து தானும் குடித்து விட்டு, தனது மகள் வேல்விழிக்கும் கொடுத்துள்ளார்.

 

Related Stories: