திங்கள்சந்தை, டிச. 1: அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான சதுரங்க போட்டி கோவையில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 19வது மண்டலத்தின் சார்பாக கலந்து கொண்ட சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இக்கல்லூரி கணினி அறிவியல் துறை 3ம் ஆண்டு மாணவி ரியா சா னோன் வெள்ளி பதக்கம் வென்றதுடன் அண்ணா பல்கலைக்கழக சதுரங்க அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெற்றிப் பெற்ற மாணவிகளையும் வழிநடத்திய கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்கள் ராஜா மற்றும் சகாய எமர்லின் ஜோசிலா, பேராசிரியர் புளோரின் ராஜா சிங் ஆகியோரை கல்லூரி தாளாளர் அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ், நிதி நிர்வாகி. அருட்பணி சேவியர் ராஜ், முதல்வர் முனைவர் மகேஸ்வரன், துணை முதல்வர் முனைவர் கிறிஸ்டஸ் ஜெயசிங், மக்கள் தொடர்பு அதிகாரி ஜஸ்டின் திரவியம், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும மாணவர்கள் வாழ்த்தினர்.
