பள்ளியில் அறிவியல் கண்காட்சி

உசிலம்பட்டி, பிப். 13: உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 200க்கும் அதிகமான மழலைகள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதன்படி குடிநீர் சுத்திகரிப்பு, ராக்கெட், காற்றாலை, லிப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட பல்வேறு வகையான படைப்புகள் மற்றும் மரம் வளர்ப்பதன் நன்மைகள் குறித்து, கண்காட்சியில் அவர்கள் விளக்கினர். இதனை தலைமை ஆசிரியர் மகன் பிரபு தலைமையில், உசிலம்பட்டி அனை த்து மகளிர் காவல் ஆய்வாளர் ராதிகா கலந்து கொண்டு, தங்கள் படைப்புகள் குறித்து விளக்கம் அளித்த மழலைகளை பாராட்டி பரிசு வழங்கினார்.

 

Related Stories: